“உங்களுக்கு காம எண்ணம்” இதை செய்யுங்க விடுபடுங்க..!!

ஆண்கள்  காம எண்ணத்தில் இருந்து படிப்படியாக விடுபட இந்த விஷயங்களை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்  உறுதியாக காம எண்ணங்கள் குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றும். உடம்பு என்பது பஞ்சபூதங்களால் கலந்த ஒரு கூடு மாதிரி. அதாவது வெறும் சதை அப்படி என்று நாம் தெளிவாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தால்  நமக்கு யார் மீதும் காம எண்ணம் வராது. பெண்களுக்கு வெறும் சதை மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது அந்த சதையானது அளவு பெரிதாக அல்லது சிறியதாக உள்ளது என்று நினைக்க வேண்டும். அவ்வளவு தான் இதில் வேறு  ஒன்னும் இல்லை.

Related image

இந்த உடலில் நிறைய கழிவுகள் மட்டுமே உள்ளது. அதற்காக எனது எதற்காக ஏன் அதிகப்படியாக ஆசைப்பட வேண்டும்.  ஆண்கள் முடிந்தவரை வீட்டில் பெண் தெய்வத்தை வழிபடுவது மிகவும் நல்லது. அவ்வாறு தினமும் வழிபட்டு அனைத்து பெண்களையும் அன்னையாக பார்க்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் அந்த பெண் தெய்வத்தை தினமும் வேண்டி வழிபட்டால் உறுதியாக நாட்கள் செல்ல செல்ல காம எண்ணம்  குறைவதை உணரலாம். அதனை மீறியும் காம எண்ணம் தோன்றினால் தினமும் காலையிலும் மாலையிலும் உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தின் பெயரையும், மந்திரத்தையும் தொடர்ந்து ஒரு மாதம் சொல்லிக் கொண்டு வந்தால் உறுதியாக  காம எண்ணம் சுத்தமாக இருக்காது.

Related image

எந்தத் தவறு செய்தாலும் பரவாயில்லை. மறக்காமல் மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும். நாம் எப்படி தவறாமல், மறக்காமல் சாப்பிடுகிறோமோ அதேபோல்தான் தினமும்  மந்திரம் ஜெபிக்கும்போது காம எண்ணம் சுத்தமாக வராது. எல்லோருமே ஈசனின் குழந்தைகள் ஆகவே  108 முறை தினமும் சொன்னால் உங்கள் மனம் காம எண்ணத்தை விட்டு  விலகிவிடும் இதை உறுதியாக நம்புங்கள் மாற்றம் ஏற்பட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதே போல் இரவில் தூங்கும்போதும் மந்திரம் சொல்லி விட்டு தூங்க போங்க. இரவில் காம எண்ணம் கொண்ட கனவுகள் வரவே வராது.

Related image

எலும்பும் சதையும் கொண்ட இந்த உடலை ஆராய்ச்சி செய்யுங்கள் அதாவது சும்மா உடல் இருப்பதாக நினைத்து பாருங்க அதில் என்ன இருக்கிறது. இது தானே அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது என்று நமக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி ஆராய்ச்சி பண்ணும் போது ஒவ்வொரு பாகங்களையும் எதற்கு இறைவன் படைத்துள்ளான் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான ஆராய்ச்சி பண்ணினால் அடுத்தவர்கள் உடல் மீதான காம எண்ணம் வராது உங்களுக்கு யார் மீது காம எண்ணம் இருக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை நினைத்து பாருங்கள் அதாவது இன்னும் 10 வருடங்களில் சதை  சுருங்கி உடலில் மாற்றம் வந்துவிடும்

Image result for Sexual

ஆனால் அதை உணராமல் நாம் அனைவருமே நமது உயிர்சக்தியை  வீணடித்து கொண்டிருக்கிறோம். இப்போது ஆசைப்படுவோம் ஆனால் உடல் நிரந்தரமானது அல்ல. உடல் நசுங்கி நம்மால் சகிக்க முடியாத அளவுக்கு அது மாறி விடும். அதனால் நிரந்தரமில்லாத உடல் மீது ஆசை வைக்க வேண்டாம். இன்னொரு  முக்கியமான விஷயம் நம்மை ஒவ்வொரு நொடியும் இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். நாமும், இறைவனும் குழந்தைகள் என்பதை தெளிவாக உணர வேண்டும்

Related image

தவறு செய்பவர் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் நாம் காம எண்ணத்தை கொண்டு செய்யும் செயலை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கண் முன்னாலயே நாம் காம  எண்ணம் கொண்டு செயல்படுகிறோம்  என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக இறைவனிடம் அனைத்தையும் சொல்லி விடுங்கள்.  அதாவது இறைவா எனக்கு முப்பது நாட்கள் தகாத எண்ணம் தோன்றக்கூடாது.அப்படி காம எண்ணம் தோன்றினால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று இறைவனிடம் சொல்லுங்கள் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். தினமும் வேண்டுங்கள் இறைவனின் அருள் கிடைக்கும்.  காம எண்ணம் படிப்படியாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *