மாஸ் காட்டும் ஜியோ ”Amount கம்மி … validity அதிகம்” புதிய ரீசார்ஜ் பிளான்…

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது.

இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் மற்ற நிறுவனங்களுக்கான அழைப்பு  ,  4ஜி வேகத்தில் 2GB இன்டர்நெட் சேவை , 25 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட  ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல முதல்முறையாக அறிமுகப்பட்டுத்தப்பட்ட ரூ.69 ஜியோ திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமி மற்ற நிறுவன அழைப்பு , 25 எஸ்எம்எஸ்கள் மற்றும் 7 ஜிபி  டேட்டாவை அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.

மேலும் ரூ.155 மதிப்பில் கொடுக்கப்பட்ட ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டம் , 28 நாட்கள் validity கொண்ட இதில் 1 நாளுக்கு 4G வேகம் கொண்ட 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் ஜியோ அழைப்பு மற்றும்   500 ஐயுசி நிமிடங்கள்  வழங்கப்படுவதாக JIO அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *