“பெட்ரோல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

பட்ஜெட் அறிவிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Image result for சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்

விலை நிர்ணயம் : 

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல  எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை  மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

 

பட்ஜெட் அறிவிப்பு :

நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் கலால் வரி , புதிய சாலை மேம்பாட்டு வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.

கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் , டீசல் :

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ _ 2.57 உயர்த்தப்பட்டு  ரூ.75.76_ க்கும் ,  ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய விலையிலிருந்து ரூ.2.52 உயர்த்தப்பட்டு ரூ ரூ.70.48_ க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரே நாளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *