மிதுன ராசிக்கு…பிரச்சினைகள் அகலும்….கோபம் உண்டாகும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடந்து முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். தித்திக்கும் செய்து வீடு வந்து சேரும். வருமானம் இருமடங்காக இருக்கும். இன்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம்.

வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள். கூடுமானவரை கொஞ்சம் அமைதியாக இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் அது போதும். மனதை நிதானமாக வைத்துக்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருந்தாலும் வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம். உயர்மட்ட அதிகாரியிடம் கோபங்கள் ஏதும் காட்டாமல் பொறுமையாக நடந்து கொண்டாள் மேலும் நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதேபோல கணவர் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *