முன்னணி நடிகை தயாரிக்கும் படத்தில் கவின்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!

கவின் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில்,  இவர் நடிப்பில் வெளியான ”லிப்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக, இவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் அருண், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி, துணை கதாபாத்திரங்கள்,  தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *