மல்டி நடிகர்கள்…. புதிய முயற்சியை கையிலெடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்….!!

மல்டி நடிகர்களை வைத்து  கௌதம் வாசுதேவ் மேனன் படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி , மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும் மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. யாதோங்கி பாராஜ் ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த இரண்டு படங்களிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வசூலில் பல சாதனைகளை முறியடித்தன.

தமிழில் இப்படி ஒரு மல்டி ஸ்டார் படத்தை டைரக்ட் செய்வதற்கு டைரக்டர் கௌதம் வாசுதேவன் முன்வந்திருக்கிறார். மாதவன் , சிம்பு , புனித் ராஜ்குமார் ஆகியோரை வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு படத்தை இயக்குவதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.