கவுதம் கம்பீர் மீது வழக்கு பதிவு…. தூள் கிளப்பும் டெல்லி போலீஸ்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. 

பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க.  சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார்.

அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு

இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கவுதம் கம்பீர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துதுள்ளது.