நாடு முழுவதும் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஒவ்வொரு வருடமும் கேட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியில், இயந்திரவியல் மற்றும் கட்டவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு பிப்ரவரி 2 முதல் 12ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை https://gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.