தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு!!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி …..

தேவையான பொருட்கள் :

பூண்டு – 1 கப்

மணத்தக்காளி வற்றல் – 12 டீஸ்பூன்

வெல்லம் – சிறிதளவு

புளி – சிறிதளவு

வெங்காய வடகம் – 2 டீஸ்பூன்

மிளகு – 4  டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

சீரகம் –  2 டீஸ்பூன்

தனியா – 2 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மணத்தக்காளி  க்கான பட முடிவு

 

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய்  ஊற்றி  மிளகு , காய்ந்த மிளகாய்,  சீரகம் , தனியா, வெந்தயம் ஆகியவற்றை போட்டு  வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்  புளிக் கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் , அரைத்த விழுது  மற்றும்  கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பூண்டை வதக்கி இதனுடன் ,மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை சேர்த்து , கொதிக்க விட்ட  குழம்பில் போட்டு எண்ணெய் தெளிய இறக்கினால்  சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார் !!!

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *