“காப்பான்” ரிலீஸ் உறுதியானது … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

சூர்யாவின் காப்பான் திரைப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முன்னனி  நடிகரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா சய்கள்  மற்றும் ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Image result for kappan

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி  படமானது  ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்தது . ஆனால் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியது. இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  . இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.