காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வைத்தியலிங்கபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் பேச்சியம்மாளை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.