ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

நெல்லை மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் மேலச்செவல் பகுதியில் வசிக்கும் சிவா, அரவிந்த், கண்ணன், பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நான்கு வாலிபர்களும் 1 1/2 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *