ஐ.பி.எல்லில் அடுத்த அதிர்ச்சி….. கங்குலி பேட்டியால் ரசிகர்கள் ஏமாற்றம் …!!

ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது .

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும்5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கயுள்ள ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிசிசிஐயின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பிசிசிஐ நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் அமைந்துள்ளது.

இன்று நடந்த கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தினமும் இரண்டு இரண்டு போட்டிகளாக நடத்தலாமா ? என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்ட நிலையில் , ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எத்தனை போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது என்று கங்குலி தெரிவித்தார்.