விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம் செய்வது எப்படி !!!

மோதகம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்

நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1  கப்

வெல்லம் – 1  கப்

ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

mothagam க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் தண்ணீர்  , உப்பு , நல்லெண்ணெய்  ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை  தூவி, கட்டியில்லாமல்  கிளறி  , ஈரத் துணியால் மூடி வைக்க  வேண்டும்.  வெல்லத்தை  பாகாகக் காய்ச்சி  தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறினால் பூரணம் தயார்.  பின் கொழுக்கட்டை  மாவை எடுத்து, கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து, உருண்டைகளாகப் பிடித்து  ஆவியில் வேக வைத்து எடுத்தால் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம்   தயார் !!!