மதிமுக சார்பில் ஈரோட்டியில் கணேசமூர்த்தி போட்டி….. வேட்பாளரை அறிவித்தார் வைகோ….!!

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ   அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் .

Image result for மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி

இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் மதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். அதில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற மார்ச்19_ஆம் தேதி  வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ஏற்கனவே சிபிஐ , சிபிஎம் , IUML  ஆகிய கட்சிகள் வேட்பாளர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.