எரிபொருள் விநியோகம் நிறுத்தம்.. தொடருமா..? ஏர் இந்தியா சேவை..!!

ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சேவையை 6 விமான நிலையங்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட உள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்திய அதிகாரிகள், தற்போதைய நிலையில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Image result for air india

மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை காண காணப்படுவதாகத் தெரிவித்த அவர், ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டதுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 60 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே 6 விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்பட்டதை இந்தியன் ஆயில் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏர் இந்திய அதிகாரிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக கூறியுள்ளனர்.