பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பழங்கள் என்பது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம். இயற்கையாக சத்துக்கள் நிறைந்த ஒரு பொருள். பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை.

பழங்களை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கும் மட்டும் என்பது தான் தெரிகின்றது. இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என பலருக்கும் தெரிவதில்லை. பழங்களை சாப்பிடும் முறை மற்றும் நேரம்: காலையில் ஏதேனும் ஒரு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது எடை குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் பொழுது நமக்கு உடலுக்கு ஆரோக்கியமும் அந்த பலத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சத்தும் கிடைக்கின்றது.

ஒரு உணவாக சாப்பிட்டு விட்டு அதன் பின் பழத்தை சாப்பிடும் பொழுது அந்த பழம் வயிற்றுக்குள் நேரடியாக செல்வதில்லை. அந்த உணவுக்குப் பின் பழம் வருவதால் உணவுடன் சேர்ந்து இரண்டு அழுகி, புளித்து அமிலமாக மாறுகிறது. செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் போது தலையில் வழுக்கை விழுவது, நரைமுடி ஏற்படுவதையும் பிரச்சனைகள் நீங்க நமக்கு உதவுகிறது.

கண்களுக்கு கீழ் ஏற்படக்கூடிய கருவளையம் நீங்கவும் உதவுகிறது. பெரும்பாலும் காலை நேரங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் உடலுக்கு நல்ல சத்துக்களை தருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *