பேருந்து ஓடும் போதே… சில்லு சில்லா நொறுங்கிட்டு… சட்டென பதறிய பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் திடீரென முன்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பவானி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில், சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதனையடுத்து பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது கண்ணாடியில் காற்று அடைப்பு (ஏர் லாக்) ஏற்பட்டதால் உடைந்து உள்ளதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதன் பின் கண்ணாடி சிதறல்கள் அகற்றப்பட்டு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இவ்வாறு ஓடும் பேருந்தில் திடீரென கண்ணாடி உடைந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.