முகக்கவசத்திடம் இருந்து விடுதலை எப்போது…. சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்…!!

மதுரை மருத்துவ அதிகாரி இன்னும் எத்தனை நாட்களுக்கு கவசம் அணிய வேண்டியிருக்கும்? என்பதை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல மாதங்களுக்குப் பிறகு தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு கொரோனா வந்துவிடுமோ? என்ற அச்சம் இருந்து வருகிறது. இதனால் முககவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

தலைக்கவசம் போன்று உயிர் கவசமாக முகக் கவசம் மாறி இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர்: “மதுரையில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இருப்பினும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது இயல்பு நிலைக்கு மாறியுள்ளனர். எல்லா கடைகளிலும் விற்பனை ஆரம்பித்து விட்ட நிலையில் களைகட்டியிருக்கிறது. நெரிசல் காரணமாக சிக்னலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றது. இவ்வாறு இருந்தால் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்படும்.

இதனால் முக கவசம் அணிவது முக்கியமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் சில மக்கள் முக கவசம் அணிவது கிடையாது. சிலர் அணிகின்றனர், ஆனால் சரியாக அணிவதில்லை. முகக்கவசம் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மூடிய வாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் முக கவசம் என்றால் அதனை உபயோகித்துவிட்டு குப்பைகளில் போடவேண்டும். துணி முக கவசம் என்றால் அவற்றை உபயோகித்துவிட்டு வீட்டிற்குச் சென்று சோப்பு நீரில் வைத்து அலச வேண்டும்.

ஒருவர் குறைந்தது நான்கு முககவசங்களை வைத்து சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை சர்ஜிகல் மாஸ்க், என்.95 மாஸ்க்கை பயன்படுத்துவது சிறந்ததாகும். நம்மையும், பிறரையும் காப்பது முகக்கவசம். எனவே அவற்றை தவறாமல் அணிவது முக்கியம் ஆகும். இன்னும் ஐந்து மாதங்களுக்கு முக கவசம் அணிந்த படியே வெளியே செல்வது நல்லது. பெரும்பாலும் குழந்தைகளை பொது இடங்களில் அழைத்து வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *