“தாய் முதல் மகள் வரை”…. வாழ்வின் தவிர்க்க முடியாத உறவு…. பெண்களின் சிறப்புகள் ஓர் பார்வை…!!!!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சிறப்புகளை போற்றும் வகையிலும் பெண்களை கொண்டாடும் வகையிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது‌. இந்நிலையில் ஒவ்வொருவர் வாழ்விலும் பெண்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் பெண்களின் சிறப்புகள் குறித்தும் தற்போது பார்க்கலாம். இந்த உலகில் பெண்ணாக பிறந்தவளுக்கு பல தோற்றங்கள் இருக்கிறது. தாய், தங்கை , மனைவி, தோழி, மகள் என்று நம் வாழ்வில் உள்ள அனைத்து உறவுகளிலும் முக்கியமான ஒருவராக திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்களின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் தான் இருக்கிறாள் என்று சொல்வதுண்டு. இதனால்தான் சொந்த நாடு கூட தாய்நாடு என்று அழைக்கப்படுகிறது.

அதன் பிறகு நதிகள் மற்றும் மலைகள் போன்றவைகளுக்கும் பெண்களின் பெயர்கள் வைக்கப்படுகிறது. இதிலிருந்தே பெண்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பது தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்‌. அதன்படி பெண்கள் விமானம் ஓட்டுதல், ரயில் இன்ஜின்களை இயக்குதல், விண்வெளிக்கு செல்லுதல், அறிவியல் ஆராய்ச்சி துறை மற்றும் கண்ணித்துறை என பல்வேறு துறைகளிலும் பெண்கள் உயர்ந்த பதவிகளில் வகித்து வருகிறார்கள்.

தற்போது பெரும்பாலான பெண்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பேணிக்காக்க பெண் கல்வி என்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைக்கு தான் தகுதியானவர்கள் என்று இருந்த நிலை மாறி படிப்படியாக வேலைக்கு சென்று தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்துள்ளனர். அப்படிப்பட்ட பெண்ணியத்தை போற்றி அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம்.