இன்று மாலை 6 மணி முதல் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் செயல்பட உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இன்று வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம் என்றும், மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும்,
இன்று மாலை 6 மணி முதல் தளர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ் வங்கி முழுமையாக திவால் ஆகிவிட்டதாக பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.