இட்லி தோசைக்கு ஏற்ற  புதுவித தக்காளி சட்னி!!!

இட்லி தோசைக்கு ஏற்ற  புதுவித தக்காளி சட்னி…
தேவையான பொருட்கள்:
தக்காளி    – 4
பல்லாரி   – 2
எள்  – 2  தேக்கரண்டி
வத்தல்  –  16
வேர்க்கடலை   – 2 தேக்கரண்டி
புளி –  சிறு எலுமிச்சை அளவு
கடுகு  –  1/4 தேக்கரண்டி
சீரகம்  – 1/4  தேக்கரண்டி
உளுந்து  – 1/4 தேக்கரண்டி
ந.எண்ணெய் – சிறிதளவு
tomato க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் ஒரு  கடாயில்   எள்  மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள  வேண்டும். கடாயில்  சிறிதளவு நல்லெண்ணை ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து , வத்தல், புளி ,  வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளி பழத்துண்டுகள் மற்றும்  தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கி
எள்  , வேர்க்கடலையை சேர்த்து  அரைத்து  எடுத்தால்  சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி தயார்!!!

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *