“ஓடும் பேருந்தில் இலவச தண்ணீர் சேவை “பொதுமக்கள் பாராட்டு ..!!

ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் .

மதுரை to  தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால்  பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் .

இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் தாகத்துடன் பயணிக்கும் நபர்களுக்கு  இவர் தம்மிடம் இருக்கும் தண்ணீரை இலவசமாக கொடுத்து உதவி வருகிறார். இவரது இந்த பொது சேவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.