சார்புகாவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 621 காலி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக கடந்த மே ஐந்தாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இதில் பிசி பிரிவினர் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் பிசி, எம் பி சி, பி சி எம் பிரிவினர் 20 முதல் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் எஸ் சி, எஸ் டி, எஸ் சி ஏ பிரிவினர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை வருகிற ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நிலை வழிகாட்டு மையத்தின் இந்த பயிற்சி வகுப்பு மே 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் சேர விரும்பும் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகை படத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 7811863916, 9699966026 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.