ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE  மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

Image result for free laptop

மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மடிக்கணினியை  கற்பித்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  கல்வி இயக்குனர், இணை இயக்குனர், அலுவலர்கள், மற்றும் 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.