கொரோனா 10 வருடங்கள் நீடிக்கும்… பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள…. அதிர்ச்சி தகவல்….!!

பைசர் நிறுவனமானது கொரோனா வைரஸ் மேலும் 10 வருடங்கள் நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மேலும் இந்த வைரஸினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தடுப்பூசியை தீவிரமாக உருவாக்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பைசர் என்னும் நிறுவனம் கொரோனோவிற்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.  இத் தடுப்பூசியானது கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உபயோகத்திற்கு வந்துள்ளது. பைசர் தடுப்பூசிக்கு மட்டும் தான் உலகில் முதல் முதலாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பைசர்  நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்னும் பத்து வருடங்களாவது இந்த வைரஸ் பாதிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இத் தடுப்பூசியை தயாரித்த மூத்த ஆய்வாளரான உகுர் சகின் கூறியுள்ளதாவது திடீரென பல இடங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கும். மேலும் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்தது பத்து வருடங்களாவது தேவைப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நாம் அனைவரும் புதிய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதாவது கொரோனோவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, கோடைகாலம் முடிவதற்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.