காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது..!!

விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு விசாரணைக்குச் சென்ற இரண்டு காவலர்களை கிராமவாசிகள் கொடூரமாகத் தாக்கினர். அதில் ஒரு காவலருக்கு மொட்டையும் அடித்தனர்.

இது தொடர்பாக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “குடும்பச் சண்டை குறித்து காவல் துறைக்கு கிடைத்த புகாரை விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

புகார் யார் மீது தரப்பட்டுள்ளதோ, அவரின் குடும்ப உறுப்பினர்களே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என்றார்.