கண்டெடுக்கப்பட்ட சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம்..!!

சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம் நியூசிலாந்தில் புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின்   பல்கலைக்கழகப்  போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில்  ஈடுபட்டிருந்த போது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளியானது சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையிலும், ஒரு சராசரி மனிதன் உயரத்தின் பாதிக்கும் மேலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

Image result for Fossil expert Trevor Worthy

இந்த கிளியின் வலிமையையும், அசாதாரண உயரத்தையும் வைத்து கிளி எப்படி இருந்துள்ளது  என்று ஒரு மாதிரி படம் வரைந்து வெளியிட்டு அந்த கிளிக்கு ஆய்வாளர்கள் ”ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்” என்று பெயரும் வைத்துள்ளனர். மேலும் ட்ரெவர் வொர்த்தி ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை போன்று பிரமாண்டமான கிளிகள் உலகில் எங்கும்  இருக்க வாய்ப்புகள் இல்லையென்றும், இந்த கிளி இனம் வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உண்டும் தனது சக கிளிகளையே இரையாக உட்கொண்டும் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *