அதிமுகவின் கோட்டை…..ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அசைக்க முடியாது…. அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு…!!

யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து விட்டனர். தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபாட்டு வரும் இந்த கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for செல்லூர் ராஜூ

இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  ராஜ் சத்யன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், பெரிய புள்ளான் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது , மதுரை அதிமுகவின் கோட்டை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது  நாங்கள்   மகத்தான வெற்றி பெருவோம் என்று  அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.