தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி, பிள்ளை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்து 1600 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் நெற்பயிர்களில் பூஞ்சை நோய் தாக்கி உள்ளது.
இதனால் வேளாண்மை துறையின் நோய் பரிந்துரை படி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.