விவசாயிகள் படுகொலை…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படுகொலை செய்யப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது காரை ஏற்றியும் துப்பாக்கி சூடு நடத்தியும் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் வன்முறையை ஏவி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைத்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகளை மீது காரை ஏற்றி கொன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *