ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சரான இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது. இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த காலணிகளை வழங்கிய பணியில் ஈடுபட்டவர் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த 50 வயதான சுரேந்திரா சிங். இவர் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
