“இவர் தான் மரத்தை வெட்டினார்” விவசாயிக்கு நடந்த கொடுமை…. தஞ்சையில் பரபரப்பு….!!!

 விவசாயி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்புதூர் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியுள்ளனர். மேலும் அதே கிராமத்தில் வசிக்கும் விவசாயி முத்துசாமி என்பவர் தான் மரத்தை வெட்டியதாக எண்ணி ராஜேந்திரன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த ராஜேந்திரன் முத்துசாமியை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *