முன்னாள் விளையாட்டு வீரர்கள்… மத்திய அரசின் ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, விளையாட்டு துறையில் சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருத்தல் வேண்டும். அதேபோல் சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும்  மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழககளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு, சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்ற தகுதியான விளையாட்டுப் போட்டிகள் இருக்க வேண்டும்.

அதேபோல் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பாக போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதில் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000 இலிருந்து 15,000க்குள் இருக்க வேண்டும். முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வு பெற தகுதி இல்லை. மேலும் மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 5 ஐந்து மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அவர் கூறியுள்ளார்.