பட்டப்பகலில் முன்னாள் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..!!

ஆப்கானிஸ்தானில், முன்னாள் பெண் பத்திரிகையாளரான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் காபூல் தலைநகரில் முன்னாள் பெண் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகருமான மேனா மங்கல் பட்டப்பகலில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், எந்த காரணத்திற்காக மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று  தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

Image result for In Afghanistan, former female journalist Mena Mangal was shot dead.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக மேனா மங்கல், எனது  உயிருக்கு ஆபத்து  இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாரென்று, புகழ்பெற்ற பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வஸ்மா ப்ரோக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .