“மின் மோட்டாரை இயக்கிய விவசாயி” திடீரென நடந்த விபரீதம்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை தேவர் சிலை தெருவில் விவசாயியான ஆறுமுகசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது இவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழையால் ஏற்பட்ட மின்கசிவு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆறுமுகசாமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *