என்ன காரணமா இருக்கும்….? விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் விவசாயியான இவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *