குரூர கிளர்ச்சியாளனுக்கு 30 ஆண்டுகள் சிறை…. சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனித உரிமை மீறில், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் காங்கோ கிளர்ச்சிப் படை தலைவன் பாஸ்கோ நடகன்டா-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது.

Image result for Former Congo insurgent leader Bosco Ntaganda sentenced to 30 years in prison

இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ பிரிவான ‘பேட்டிரியாட்டிக் போர்ஸ் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் காங்கோ’-வை (Patriotic Forces for the Liberation of Congo FCLP) தலைமையேற்று நடத்தியவர் தான் இந்த பாஸ்கோ நடகன்டா.2002-2003 இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த FCLP ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தும், பெண்கள், குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தும் குரூர போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்.

Image result for Former Congo insurgent leader Bosco Ntaganda sentenced to 30 years in prison

இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில், பாஸ்கோ நடகன்டாவை குற்றவாளியென கடந்த ஜூலை மாதம் சர்வதேச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நடகன்டாவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *