“என்னை கவனிக்க யாரும் இல்லை” விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு…. தென்காசியில் பரபரப்பு….!!!

விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் பகுதியில் விவசாயியான பாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னை கவனிக்க யாருமில்லை என்பதால் மனவேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி பாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு  பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *