“எனக்கு அமெரிக்கா வேண்டாம்” விவசாயம் தான் வேண்டும்….!! பல லட்சத்தை தூக்கி எறிந்த சேலம் வாலிபரின் வெற்றிக் கதை….!!!

விவசாயத்திற்காக அமெரிக்க வேலையை தூக்கி எறிந்துவிட்டு வந்த சேலம் வாலிபரின் வெற்றிப் பயணத்தை பற்றி பின்வருமாறு காண்போம்.

சேலம் மாவட்டத்திலுள்ள சிறு டவுன் பகுதியை சேர்ந்தவர் கிரு மைக்கா பிள்ளை. இவர் பல லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் அமெரிக்க வேலையை தூக்கி எறிந்துவிட்டு இந்தியா வந்துள்ளார். தற்போது விவசாயத்துறையில் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வர்த்தகத்தை உருவாக்கி பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

இதில் என்ஜினீயரிங் படிப்பை முடித்த கிரு மைக்கா பிள்ளை சில ஆண்டுகள் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றியுள்ளார். பின்பு எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் டார்ட் மவுத் என்ற பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார். அதன்பின் எம்.பி.ஏ படிப்பை முடித்த கையோடு அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கை நிறைய சம்பளம், பேச்சுலர் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இவருக்கு தனது சொந்த நாட்டில் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது. எனவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் பொழுது சொந்த தொழில் துவங்குவதற்கான திட்டத்தையும், ஏற்பாடுகளையும் செய்து வந்த இவர் 2018-ல் அமெரிக்க வேலையை தூக்கி எறிந்து விட்டு இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இதில் மைக்கா பிள்ளை அமெரிக்காவில் பணியாற்ற போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் அதிகப்படியான வரவேற்பும் அங்கு கிடைத்ததுள்ளது. இதனை உணர்ந்த இவர் விவசாய பொருட்கள் உணவுப் பொருட்களுக்கு இந்தியாவை விடவும், வெளிநாட்டில் அதிகப்படியான வரவேற்பு இருக்கின்றது என்று கூறுனார். சேலம் சிறிய நகரமாக இருந்தாலும் விவசாய பொருட்களுக்கு பஞ்சம் இல்லாத இடமாக விளங்குகின்றது. இதனால் பல மாதம் திட்டமிட்டு உள்ளூர் விவசாயிகளிடமிருந்து அதிகம் விளையக்கூடிய பொருட்களை பட்டியலிட்டுக் அதேவேளையில் வெளிநாட்டில் அதிக டிமாண்ட் இருக்கும் பொருட்களை பட்டியலிட்டு ஆய்வு செய்து அந்த பொருட்களை எப்படி மேம்படுத்த முடியும் என்று யோசித்து விவசாய பணியில் இறங்கியுள்ளார். இந்த ஆய்வில் அவர் தேர்வு செய்த பொருள் மஞ்சள். ஈரோடு, சேலம் பகுதிகளில் மஞ்சள் அதிக அதிகம் விளையக்கூடிய பொருள். எனவே இவர் தனது சொந்த நிறுவனமான, The Divin foods-ஐ தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பணியாற்றி சேர்த்து வைத்த பணத்தை முதலீடாக கொண்டு இந்த ஸ்டாப் அப் நிறுவனத்தை இவர் உருவாக்கினார். இன்று சேலத்தில் விளைவிக்கும் மஞ்சளை இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் சேலம் பகுதிகளில் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சளை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதனை தூளாக்கி இவர் விற்பனை செய்கின்றார். இதைப்போலவே ஆர்கானிக் மஞ்சள்தூள் மட்டுமல்லாது Curcumin சோப், golden milk latte மற்றும் rash balm தயாரித்து விற்பனை செய்வதாக மெக்கா பிள்ளை தெரிவித்துள்ளார். தற்போது The Divin Foods நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *