“விவசாயத்தில் நாங்களும் சாதிப்போம்” விருது பெற்ற முதல் பெண்மணி….!!

விவசாயத்தில் சாதனை படைத்து விருது பெற்ற முதல் பெண்மணி பற்றி பின்வருமாறு காண்போம்.

நவீன மயமாகி விட்ட தற்போதைய உலகில் ஆண், பெண் வேறுபாடின்றி  இருவரும் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.ஐ.டி-யில் தொடங்கி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, கால்டாக்சி என அனைத்திலும் பெண்கள் வேலை செய்கின்றனர். இருப்பினும் சில வேலைகளில் ஈடுபட பெண்களுக்கு விருப்பம் குறைவாகவே இருக்கின்றது. மேலும் சில வேலைகள் அவர்களது இயற்கை உடலமைப்பிற்கு ஒத்துவராதவையாக உள்ளன.  அவற்றில் சிலவற்றை பின்வருமாறு காண்போம்.

மெக்கானிக்

பெரும்பாலும் பெண்களுக்கு மெக்கானிக் சார்ந்த வேலைகளில் ஈடுபட விருப்பம் இருக்காது. அதோடு இது கொஞ்சம் கரடு, முரடான வேலை என்பதாலும் சில பெண்களே இதனை தேர்வு செய்கின்றனர்.

மீன்பிடித்தல்

மீன் பிடிப்பது என்பது நமது ஊர்களில் ஆண்களின் முழு நேர வேலையாகும். அது கடல், ஆறு, குளம் என எந்த நீர் நிலையாக இருந்தாலும் ஆண்களின் தொழில் என்ற ரீதியில் தான் பார்க்கப்படுகின்றது. எனவே இதில் பெண்கள் அதிகளவில் ஈடுபட மாட்டார்கள்.

மாயாஜாலம்

மாயாஜாலம் போன்ற வேடிக்கை காட்டும் வேலைகளில் பெண்கள் அதிகளவில் ஈடுபட மாட்டார்கள். இவை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் பொழுது போக்காகும். ஆனால் இதனை வேலையாக செய்ய எந்த பெண்களும் முன்வர மாட்டார்கள்.

விவசாயம்

விவசாயத்தில் பெண்களின் பங்கு இருக்கின்றது. ஆனால் ஆண்களின் அளவுக்கு அவர்களுக்கு பங்கு இல்லை. அதற்கு காரணம் விவசாயத்தில் ஒரு சில வேலைகளை தவிர மற்றவை எல்லாவற்றிலும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும். இவை பெண்களின் உடலுக்கும், இயற்கைக்கும் ஒத்துவராது என்பதால் உயர்கல்வி படித்து விட்டு பெண்கள் வேலை இல்லை என்று புலம்பி வருகின்றனர். அவ்வாறு வேலை இல்லாமல் புலம்புவதை தவிர்த்து விட்டு நாம் அனைவரின் உயிரை காக்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்று பிரசன்னா கூறுகின்றார். மேலும் நலிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் உண்டு என்பதாலும், விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்வதை தடுக்கவும் நாம் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

அதோடு இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற இலக்குடன் செயல்பட்டால் நாம் விவசாயத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம். இதனையடுத்து  விவசாயத்திற்கு சொந்த நிலம் இல்லாவிட்டாலும், விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தாராளமாக விவசாயத்தை மேற்கொள்ளலாம். நெல் சாகுபடியில் தமிழக அளவில் முதலிடம் பெற்று சிறந்த விளைச்சலுக்கான விருதை பிரசன்னா பெற்றுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா முதுகலை பட்டத்துடன் கல்வியியல் படிப்பு முடித்துள்ளார். ஆசிரியராக வேண்டிய இவர் ஏன் விவசாயத்தை தேர்ந்தெடுத்தார் என்று அவரிடம் கேட்ட போது பின்வருமாறு கூறினார்.

விவசாயம் தான் எங்கள் குடும்ப தொழில். அதனால் சிறு வயதிலிருந்தே என் பெற்றோருடன் வயலில் இறங்கி அவர்களுக்கு உதவி செய்வேன். அதோடு வயல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அப்போதே வந்து விட்டது. மேலும் விவசாயத்தை இப்படித்தான் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் வந்து விட்டது. என் கணவர் பத்மநாபன் என்னை மனைவியாக ஏற்க முக்கிய காரணமே நான் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டது தான் என்று பிரசன்னா பெருமையுடன் கூறுகின்றார். பல லட்சம் ஏக்கரில் டெல்டா பகுதியில் திட்டமிட்டு விவசாயம் செய்பவர்கள் கூட நெல் விளைச்சலில் பிரசன்னாவின் சாதனையை நெருங்க முடியவில்லை.

நம் பாரம்பரிய விவசாய முறைகளை விட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற நேர்த்தியும் பிரசன்னாவிற்கு இந்த வெற்றியை தேடி தந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் நெல் விளைச்சலில் சாதனை படைக்கின்றவர்களுக்கு விருது தருவதோடு, ரூபாய் 5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பதை கேள்விப்பட்டேன்.  இந்த விருதை வாங்கியே ஆக வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். அதற்கு என் கணவர் பக்கபலமாக இருந்து எனக்கு ஆலோசனை வழங்கினார். இருப்பினும் 3 முறையும் தோல்வி தான் எனக்கு பரிசாக கிடைத்தது. ஆனாலும் கூட நான் விவசாயத்தை கைவிடாமல் அந்த தோல்விகளை அனுபவமாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தேன். பின்னர் 4-வது முயற்சியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *