நடுவட்டம் மலைப்பாதையில் பயங்கர காட்டுத்தீ…. போராடும் வன ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுவட்டம் பேரூராட்சியை சுற்றி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. நேற்று மாலை தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் திடீரென காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரிய வகை மூலிகை செடிகள், தாவரங்கள், சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் காட்டு தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல் வெளியாகவில்லை.