ஈரோட்டில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வனப்பகுதியில் தற்காலிக நீர் தொட்டி அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம். இந்த பகுதிக்கு உட்பட்ட ஆசனூர் தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால் செடிகள் மற்றும் மரங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் காய்ந்து உள்ளன. இதனால் காட்டுப் பகுதியில் இருக்கும் ஏரிகள் , குட்டைகள் உள்ளிட்டவை நீர் இல்லாமல் வறண்டு உள்ளது . இதன் காரணமாக காட்டிலுள்ள யானைகளும் , விலங்குகளும் அருகில் உள்ள கிராமத்தில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தாளவாடி வனப்பகுதியில் வனத்துறையினர் தற்காலிக நீர்த்தொட்டி அமைத்து வருகின்றனர். இந்த தொட்டிளில் பம்பு செட்டு மூலமாக நீரை சேமிப்பதால் காட்டில் உள்ள விலங்குகள் ஊருக்குள் நுழைவது குறையும் என்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வனத்துறையினரின் இந்த முயற்சியால் அருகில் உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.