”மழையால் வந்த முதலைகள்” வழியனுப்பி வைத்த வனத்துறை…!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் கிணற்றுக்குள் விழுந்த முதலையை வனத்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறு கரைபுரண்டு ஓடுகின்றன. நீர்நிலைகளில் நிறைந்து வருகின்றன.வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டது.இந்நிலையில் பெல்காமில் உள்ள நாகூரில் இருந்த ஒரு கிணற்றில் முதலை ஒன்று இருந்தது.

Image result for Crocodile in Karnataka state

இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் இது குறித்த தகவலை வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் முதலையை கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.முதலை வெளியேற்றப்பட்டதால் ஊர் மக்கள் நிம்மதி அடைந்தனர் .