துப்பாக்கி முனையில் பலாத்காரம்… காம கொடூரனுடன் கைகோர்த்த காவல்துறை… உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி தலித் பெண் ஒருவரின் வீடு புகுந்து பாணசிங் என்ற கொடூரன் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின் அவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

Image result for சிறுமி பலாத்காரம்

இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் பதிலளித்து சமாளித்தனர். கையில் பிடித்துக் கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்றும் பார்க்காமல் கொடூரனை தப்பிச் செல்ல அனுமதித்த காவல் நிலையத்திற்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. மேலும்  தப்பிக்கவிட்ட  காவல்துறை அதிகாரிகளுக்கும்   குற்றவாளிக்கும்  தொடர்பு இருப்பதாகவும் குற்றசாட்டு  எழுந்துள்ளது.