அடடே சூப்பர்… முதல்முறையாக போர்க்கப்பலில் மிக்-29 கே விமானம் இரவில் தரையிரக்கம்… கடற்படை பெருமிதம்..!!!!!

இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் மிக் 29 கே போர் விமானம் இரவில் தரை இறங்கி சாதனை படைத்துள்ளது. மிகவும் சவாலான இரவு தர இயக்கத்தை விக்ராந்த் மாலுமிகளும் விமானப்படை விமானங்களும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றில் மை கல்லை பதிந்துள்ளனர்.  இந்த சாதனையானது அரேபிய கடலில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இது கடற்படையின் தற்சார்பு கொள்கையை வெளிப்படுத்துகிறது என கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மார்வெல் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கடற்படையின் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியதாவது, இது விக்ராந்த் போர்க்கப்பலின் அதிகாரிகள் விமான படை வீரர்கள் போன்றோரின் திறனை வெளிப்படுத்துகிறது என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் – 29 கே போர் விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் 4 விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போர்க்கப்பலில் தரை இறக்கப்பட்டது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஏஎஸ் விக்ராந்தை தொடங்கி வைத்தார். சுமார் 40,000 டன்னுக்கும் அதிகமான சுமையை சுமந்து செல்லும் கப்பல்களை கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேபோல் ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட விக்ராந்தில் வான் பாதுகாப்பு கப்பல் எதிர்ப்பு, ஏவுகணை அமைப்பு போன்ற இடம்பெற்றுள்ளது. மேலும் 300 போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தும் அளவிற்கு விக்ராந்த் போர்க்கப்பலில்   இடம் பெற்றுள்ளது. அதேபோல் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றும் என கடற்படை கூறியுள்ளது.

Leave a Reply