விண்வெளியில் முதன்முதலில்…. “முள்ளங்கி அறுவடை” 2021 பூமிக்கு வரும் – நாசா அறிவிப்பு…!!

நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக விண்வெளியில் முள்ளங்கியை அறுவடை செய்துள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விண்வெளியில் வைட்டமின் மாத்திரை வழங்கப்படுவது வழக்கம். ஏனெனில் பூமியிலிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் நீண்ட காலத்துக்கு எடுத்து கொள்ள முடியாது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில், காய்கறி செடிகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குளிர்சாதன பெட்டியை உருவாக்கி, அதில் செடி வளர்வதற்கு தேவையான ஆக்சிஜன், செயற்கை சூரிய ஒளி, மற்றும் பூமியிலிருந்து எடுத்து வந்த மண், உரம் மற்றும் பல செடிகளை இயந்திரத்தில் வைத்து அவர்கள் சோதித்து வந்துள்ளனர். நீரூற்றி அவற்றை பராமரித்து வந்தபோது ஏராளமான செடிகள் வளரவில்லை. இந்நிலையில் நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கி பயிரை அறுவடை செய்துள்ளது.

இந்த முள்ளங்கி செடியை விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் அறுவடை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் காய்கறிகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் காணொளி காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. இதனால் பலரும் நாசாவுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நாசாவினுடைய தாவர பரிசோதனையின் ஒருபகுதியாக முள்ளங்கி அறுவடை ஒரு வரலாற்று அறுவடை என்று நாசா கூறியுள்ளது. இந்த முள்ளங்கியானது 2021 ஆம் வருடம் பூமிக்கு கொண்டு வரப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *