இரண்டாம் உலக போருக்கு பின்…. முதல் தடவையாக…. இயேசு சிலை வேறு இடத்திற்கு மாற்றம்…!!!

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக உக்ரைன் நாட்டில் உள்ள வீவ் நகரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

உலக நாடுகளில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடந்த 1939 ஆம் வருடத்திலிருந்து 1945ஆம் வருடம் வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருக்கும் வீவ் என்னும் நகரத்தின் ஆர்மீனியன் தேவாலயத்தில் இருந்த இயேசு சிலையை, குண்டு வீச்சு போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக ஆலயத்தை விட்டு வெளியே கொண்டு சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவதால், இரண்டாம் உலகப்போருக்கு பின்பு முதல் தடவையாக அந்த இயேசு சிலை மீண்டும் மறைவான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.