“பாலின குற்றம்”10 ஆண்டுக்கு பின்… 3 மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் இருந்து நிலையில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குவாலியர் குழந்தை பாதுகாப்பு அமைப்பு ஒன்று கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை அறிவித்த மருத்துவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்டிங் ஆபரேஷன் என்ற ஒன்றை நடத்தி வந்தனர்.

Image result for stomach baby

அப்போது மருத்துவர்கள் எஸ்கே ஸ்ரீவத்சவா சந்தியா, சிவாஜி ஆகியோர் தலா 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை கூறியது தெரியவந்தது இதுதொடர்பாக பத்து ஆண்டுகளுக்கு மேல் குவாலியர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில் மூவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளது.