ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தனது கோர முகத்தைக் காட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில் ஆன்லைன் வகுப்புகள் கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை எக்காரணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்றும் இது தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *